ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்…! கொரோனா பீதி..?

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


சென்னை: சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் மக்கள் கொரோனா பீதியடைந்தனர்.

 

சென்னை கொருக்குபேட்டையில் உள்ள சாலையில் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் கிடந்திருக்கிறது. அதை போட்டோ எடுத்த சிலர் போட்டோ எடுத்து, கொரோனா தொற்று பரப்புவதற்காக வீசப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினர்.

 

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சென்னை மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து அதன் மீது கிருமி நாசினி தெளித்தனர்.

 

பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்தினர். இந்த வதந்தியை பரப்பிய நபர்களை கண்டுபிடிக்க போலீசார் முயன்றுள்ளனர்.

 


Leave a Reply