கொரோனா பிரச்னை…! பிரபல கோயில் தேர்த்திருவிழா ரத்து…! எந்த ஊருன்னு பாருங்க?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும், தொடர்ந்து பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான சில கோயில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

ஊரடங்கு ஒரு பக்கம் இருக்க, மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, சித்திரை திருவிழா நேற்று ரத்து செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

 

இந் நிலையில், வரும் 4ம் தேதி நடைபெற இருந்த புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டமும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை முன்வைத்து மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதனால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 


Leave a Reply