நாளை முதல் பணிக்கு திரும்பும் போரிஸ் ஜான்சன்!

சர்வதேச அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரொனா தொற்று உறுதி ஆகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. சர்வதேச அளவில் ஒரே நாளில் கொரொனா தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

முதன்முறையாக கொரொனா வைரஸ் தொற்று ஒரே நாளில் ஒரு லட்சம் என்ற உச்சத்தை எட்டி இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போதைய சூழலில் கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டது.

 

இந்த நிலையில் , கொரொனாவில் இருந்து மீண்டு இருக்கும் பிரிட்டன் பிரதமர் மோடி ஜான்சன் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி கடுமையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் ஒன்பதாம் தேதி வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

வைரசில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் அவர் வைரஸ்களில் இருந்து பிரிட்டனை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் அதனால் நாளை முதல் அவர் பணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply