தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா…! சென்னையில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் 2ம் கட்டமாக அவர் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நாள்தோறும் குறைந்தது 50 முதல் 90 வரை புதிய கொரோனா நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆகும்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 960-ல் இருந்து 1020 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.






