தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்த மழை: 5 பேர் பலியான சோகம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


சென்னை: 9 மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மறுபக்கம் தமிழகத்தின் பல இடங்களில் காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

 

பலத்த சூறாவளி மற்றும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் வழிந்தோடியது. கனமழையால் மாநிலம் முழுவதும் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.

 

இந் நிலையில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யும்.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.


Leave a Reply