அமெரிக்காவில் பயங்கர சூறாவளி….6 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் ஓக்லகாமா மாநிலங்களில் பயங்கரமான சூறாவளி காற்றால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஓணலாஸ்கா எனுமிடத்தில் திடீரென பயங்கர சூறாவளி வீசியது. இதில் அலைக்கழிக்கப்பட்ட ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஒரு சில இடங்களில் கூரைத்தகடுகளையும் பெயர்த்து எரிந்தது. இந்த சூறாவளியில் 3 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 20 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல ஓக்லகாமா மாநிலத்தில் இருவரும், லூசியானாவில் ஒரு பெண்ணும் சூறாவளியால் உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சூறாவளியால் மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததால் டெக்சாசில் 9 ஆயிரம் பேரும் ஓக்லகாமாவில் 7 ஆயிரம் பேரும் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர்.

கொரொனா நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் கூட்டாக ஈடுபடவேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிர் இழப்பை தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகளும் தனித்தனியே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்காத நிலையில் ஐநா பொதுச்செயலாளர் அளித்துள்ள பேட்டியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய எதிரியை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும், இதை மனதில் கொண்டு சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளின் தலைவர்களும் தனியார் துறையினரும் கூட்டாக இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.






