அக்சய திருதியைக்கு ஆன்லைனில் நகைகளை விற்க ஏற்பாடு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவலை கட்டுபடுத்த 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்ஷய திருதியை ஒட்டி ஆன்லைன் மூலம் நகைகளை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் நகைக்கடைகள் ஈடுபட்டுள்ளன. அக்ஷய திருதியை அன்று தங்கம், வெள்ளி நகை வாங்குவதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதன்படி நாளை அக்ஷய திருதியை வர உள்ள நிலையில் 144 தடை காரணமாக கடைகள் மூடப்பட்டு இருப்பதால் நகைகளை நேரில் மக்களால் வாங்க முடியாத நிலை உள்ளது.

 

இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் நகைகளை விற்கும் முயற்சியில் நகைக்கடைகள் ஈடுபட்டுள்ளன. ஆன்லைனில் நகையை முன்பதிவு செய்து 144 தடை முடிவுக்கு வந்த பிறகு நகைகளை நேரில் வாங்கிக் கொள்ளலாம் என நகைக்கடைகள் விளம்பரம் செய்து வருகின்றன.

 

உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகளை இணையதளம் வாயிலாக பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனை காண்பதற்காக புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

 

கொரொனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் இருப்பதால் கோவிலுக்கு வர முடியாத பக்தர்களின் வசதிக்காக இணையதளம் வழியாக சிறப்பு பூஜைகளை பக்தர்கள் தரிசிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. www.thirunallarutemple.org என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் சிறப்பு பூஜையை நேரலையாக தரிசித்து மகிழலாம்.


Leave a Reply