டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் கொரொனா பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்திலிருந்து தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களில் 183 பேர் டெல்லி மருத்துவமனைகளில் கொரொனா தொற்றிற்காகவும், 376 பேர் தனிமைப்படுத்த மையங்களில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள மோசமான நிலை குறித்து தமிழக அரசுக்கு பல்வேறு புகார்கள் வருவதை குறிப்பிட்டுள்ளார்.

 

சிலர் நீரிழிவு குறைபாட்டாலும் மற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் . எனவே பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ரமலான் மாதத்தில் அவர்களுக்கு உரிய நேரங்களில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு விலக்கு அளித்து உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோரின் வீடுகளைத் தேடி சென்று பால் மற்றும் பால் உபயோகப் பொருட்கள் வினியோகம் செய்வதற்காக ஜோமாட்டோ மற்றும் டங்க்சோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply