கோவையில் வாகன சோதனை: மருத்துவ ஊழியருக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி தொடரும் வாக்குவாதம்!

Publish by: கோவை-விஜயகுமார் --- Photo :


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்காக மே மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிக அவசர தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று காவல்துறை சார்பாகவும், சுகாதாரத்துறை சார்பாகவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் காவல் துறை,மருத்துவ துறை,பத்திரிக்கை துறை என முக்கியத் துறைகளை சார்ந்தவர்கள் தினந்தோறும் வெளியே வந்து செல்வது மிக அவசியமாக உள்ளது.

 

இந்த நிலையில் இன்று கோவை லட்சுமி மில் பகுதியில் வாகன சோதனையின் போது போலீசாருக்கும், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கும் இடையே அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நடந்தது.இத்தனைக்கும் அவர் தனது அடையாள அட்டையை காண்பித்தும் காவல் துறை எஸ்.ஐ – யின் நடவடிக்கையால் அப்பெண் ஊழியர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

போலீசாருக்கும், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில்  மருத்துவர்கள்,மருத்துவ பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,காவல் துறையினரின் பணி போற்றுதலுக்குரியது.தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை வைரஸ் தாக்குதலில் இருந்து காக்கும் பணியில் ஈட்பட்டு வருகின்றனர்.

 

பத்திரிக்கையாளர்களும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில் காவல்துறையினருக்கும்,மருத்துவம்,சுகாதாரம்,பத்திரிக்கையினருக்கும் இடையே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.இதனால் இத்துறையினர் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.காவல் துறையினர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் இத்துறையினரின் அடையாள அட்டையை காண்பித்தவுடன் அவர்களது பணிகளை தொடர அனுமதிக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 


Leave a Reply