ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் 2650 டன் கோவை வந்த ரேஷன் அரிசி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


மத்திய தொகுப்பில் இருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதைப்போல் கோவை மாவட்டத்துக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் கோவை சிங்காநல்லூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2650 டன் ரேசன் அரிசி கோவை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சிங்காநல்லூரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பின்னர்,அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.


Leave a Reply