கொரொனாவால் உயிரிழப்பவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் கடும் நடவடிக்கை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களபணியாளர்களை இறைவனுக்கு நிகராக கருதுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

கொரொனா தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களின் உடல்கள் உரிய பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் அடக்கம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் தருவதாக தெரிவித்துள்ளார்.

 

தன்னலம் பாராமல் மருத்துவ பணியாற்றி உயிர் துறப்பவர்களுக்கு தகுந்த மரியாதை தரும் விதத்தில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரொனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்துக்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஊரடங்கு நேரத்தில் பாத்திர கடை, துணிக்கடை உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியில் கொரொனா பாதித்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுமார் 8000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 

இந்நிலையில் காலை 9 மணி வரை தினசரி காய்கறி சந்தை நடந்து வருகிறது. மேலும் கோபிசெட்டிபாளையம் கடைவீதிகளில் துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. இன்று மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். தனிமனித இடைவெளி கடைபிடிக்க நிலையில் இந்தப் போக்கு தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.


Leave a Reply