ஆளில்லா லாரி பின்நோக்கி சென்று மோதியதில் விபரீதம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரியில் ஆளில்லா லாரி பின்னோக்கி சென்று மோதியதில் சோதனைச் சாவடியில் இருந்த காவலர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதி வழியாக கேரளா சென்று கொண்டிருந்த லாரியை நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுனர் இறங்கியுள்ளார்.

 

அப்போது ஆளில்லாத அந்த லாரி பின்னோக்கி சென்று அருகிலிருந்த சோதனைச் சாவடி மீது மோதி நின்றது. இதில் சோதனைச்சாவடி இடிந்து விழுந்தது. அப்போது அந்த பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கருணாகரன் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.

மும்பை அருகே தானேயில் ஊரடங்கை மீறி நடைபயிற்சிக்கு வந்தவர்கள் வெட்கப்படும் வகையில் அவர்களுக்கு காவல்துறையினர் ஆரத்தி எடுத்தனர். கொரொனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதுடன் பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரொனா அதிகம் பாதித்த சிவப்பு மண்டலமத்தில் காலையிலேயே வழக்கம் போல பலர் நடைப்பயிற்சிக்கு வந்தனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அதற்கு மாறாக தட்டில் சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்தனர். காவல்துறையினரின் இந்த புதுமையான செயல் ஊரடங்கை மீறி அவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கப் படும் படியாக அமைந்தது.


Leave a Reply