கண்டெய்னர் லாரியில் பயணித்த 24 பேர் காவல் துறையினரிடம் சிக்கினர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 24 பேரை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை பரமத்தி வேலூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார்கள். பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது லாரிக்குள் 24 பேர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தாங்கள் திருவனந்தபுரத்தில் தள்ளுவண்டிகளில் வேர்கடலை விற்று வந்ததாகவும் தற்போது வாழ்வாதாரம் இன்றி இருப்பதால் சொந்த ஊருக்கு பயணம் செய்வதாகவும் தெரிவித்தனர்.

 

ஆனால் அந்த லாரி ஓசூர் வழியே செல்லும் எனவும் அதுவரை தங்களை கொண்டு சென்றுவிடுவதாக ஓட்டுநர் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினார். தொடர்ந்து கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் உட்பட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 24 தொழிலாளர்களுக்கு வேலூர் பேரூராட்சியினர் உணவு வழங்கினர்.

 

பின்னர் அவர்களுக்கு சுகாதாரத் துறை மூலமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply