கொரோனா: தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் தேவை..! பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்த தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கருவிகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகவும் இதற்கு பிரதமரும் ஒப்புக் கொண்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா வைரஸ பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

 

மேலும், தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அதிகப்படியான ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர், ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply