டெல்லியில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் இரண்டு காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து டெல்லியில் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லியில் ஆயிரத்து 640 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் 2 தலைமை காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 26 போலீசார் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.

 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த 20 கடற்படை அதிகாரிகளுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மும்பையில் உள்ள அங்கை கடற்படை தளத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு கடந்த 7ம் தேதி என்று கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருடன் பணியாற்றிய சக கடற்படை அதிகாரிகள் தனிமைப்படுத்தப் பட்டனர். கொரொனா அறிகுறி உடைய அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 

கடற்படை தளத்தில் பணியாற்றிய 19 கடற்படை அதிகாரிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரொனா பாதித்து இருக்கும் அதிகாரிகளுக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகின்றன.


Leave a Reply