மொட்டை மாடியில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வீட்டின் மொட்டை மாடியில் இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் மரணம் தற்கொலையா? கொலையா? தந்தை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு தனது சொந்த வீட்டின் மொட்டை மாடியில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

தூத்துக்குடி பூபால ராயர் புரத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவரது மகன் 19 வயதான சஞ்சய். கூலி தொழிலாளியான சஞ்சய் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். மகனின் எதிர்காலம் பாழாகிறது என பெற்றோர் கண்டித்த நிலையில் கடந்த பல மாதங்களாக தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 

சஞ்சய், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் சமீபகாலமாக பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் மீண்டும் ஊர் சுற்றுவது, மது அருந்துவது என சஞ்சய் தனது பழைய பழக்கங்களை தொடர்ந்ததால் தந்தை குமார் கண்டித்துள்ளார். கோபமடைந்த சஞ்சய் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

 

சண்டையின் போது வீட்டை விட்டு வெளியேறும் சஞ்சய் பின்னர் வீடு திரும்பி விடுவார் என்பதால் பெற்றோரும் தேடவில்லை. ஒரு வாரம் ஆகியும் சஞ்சய் வீடு திரும்பாததால் உறவினர்கள் வீட்டில் விசாரித்துள்ளனர். அங்கு சஞ்சய் வரவில்லை என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் சஞ்சய் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அவரது வீட்டின் மாடியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளனர்.

 

வீட்டின் மொட்டை மாடிக்கு படி இல்லாததால் ஏணி வைத்து ஏறி பார்த்தபோது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுபோதையில் வீட்டின் மொட்டை மாடிக்கு ஏறிய சஞ்சய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து மொட்டை மாடியில் போட்டு விட்டார்களா என விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply