அசாமில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதால், அலைமோதிய கூட்டம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபான கடைகளுக்கு படையெடுத்தனர். அப்போது தனிமனித இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மதுக் கடைகள் திறக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

வரும் 30ஆம் தேதி வரை எந்த காரணம் கொண்டும் மது கடைகள் திறக்கப்படாது என்று தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரொனா குறித்த பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் தனிநபர் இடைவெளியில் நின்றனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் உள்ளோம் என்று தெரிவித்தார். எந்த காரணம் கொண்டும் திறக்கப்படாது என உறுதிபட தெரிவித்து அமைச்சர் தங்கமணி தொழிற்சாலைகளின் தேவை 3,000 மெகாவாட் குறைந்துள்ளதாக கூறினார்.


Leave a Reply