தெரு நாய்களுக்கு வழங்கப்படும் சிக்கன் பிரியாணி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு பெண் ஒருவர் அன்றாடம் சிக்கன் பிரியாணி சமைத்து வழங்கி வருகிறார்.பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த சாந்தி கடந்த சில ஆண்டுகளாக தாம் வசிக்கும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவை வழங்கி வருவது வழக்கமாகி வருகிறது என்று கூறப்படுகிறது.

 

தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பக்கத்து தெருக்களில் உள்ள நாய்களுக்கும் கூடுதலாக பிரியாணி சமைத்து எடுத்து சேர்த்து வழங்கி வருகிறார். காலையில் பிஸ்கட் மாலையில் சிக்கன் பிரியாணியும் வழங்கி வருவதாக கூறுகிறார். சாந்தி சாதாரண நாட்களில் குப்பைகளில் கிடக்கும் உணவுகள் கூட தற்போது நாய்களுக்கு கிடைக்காது என்பதால் பிரியாணி அளிப்பதாக தெரிவித்தார்.


Leave a Reply