சீனாவில் கொரோனா தடுப்பூசி 2ஆம் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதனை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தடுப்பூசியை இரண்டாம் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதிக்கும் நடைமுறையை சீனா தொடங்கியுள்ளது. சீனாவின் கேன்சினோ பாயலாஜிஸ்ட் நிறுவனம் மரபியல் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே முதற்கட்டமாக மனிதர்கள் மீது கடந்த மார்ச் மாதம் பரிசோதிக்கப்பட்டது.

 

தடுப்பூசியை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பதை கண்டறிய முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.இரண்டாம் கட்ட பரிசோதனையில் தடுப்பூசியின் திறனாய்வு செய்யப்படுகிறது. மனிதர்கள் மீது தொடங்க உள்ள இந்த சோதனைக்காக முகாமை சேர்ந்த 84 வயது நபர் உட்பட தாங்களாக முன்வந்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

கொரொனா நோயானது பன்றிக் காய்ச்சலை விட பத்து மடங்கு ஆபத்தானது என கூறியுள்ள உலக சுகாதார நிறுவன தலைவர் தடுப்பூசி ஒன்றை அதன் பரப்பை தடுத்து நிறுத்த முடியும் என கூறியுள்ளார்.

 

டெல்லி அரசு மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரே பகுதியை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதன்படி நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒன்பது பேரும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

 

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரும் களக்காடு பகுதியை சேர்ந்த இருவரும் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.இவர்கள் அனைவரும் நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீடு திரும்பியுள்ள 13 பேரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply