கொரோனா பரிசோதனை இலவசம் என்ற உத்தரவை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரிசோதனையை தனியார் ஆய்வகங்களில் இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது.இதன்படி பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர்க்கான ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களில் இணைந்து இருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக பரிசோதனை செய்தால் போதுமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக பரிசோதனையை அனைத்து தனியார் ஆய்வகங்களில் இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுவில் தனியார் ஆய்வகங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட உடன் ஏராளமானோர் குவிந்ததால் பரிசோதனை மிகவும் தாமதமாகும் என்று கூறப்பட்டிருந்தது.

 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இலவசமாக பரிசோதனை செய்தால் போதும் என்று உத்தரவை திருத்தி அமைத்துள்ளனர்.


Leave a Reply