வருங்கால மனைவிக்கு ட்ரோனில் சாக்லெட்டை அனுப்பியவர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் வருங்கால மனைவிக்கு டிரோன் மூலம் சாக்லெட்டை அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பாரதி புரத்தை சேர்ந்த கணேஷ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.

 

அதே பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன் வரும் 27ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஊரடங்கு காரணமாகவும், இரவு பணி காரணமாகவும் வருங்கால மனைவியை பார்க்கவும் பேசவும் முடியாமல் தவித்த கணேசன் விமானம் மூலம் சாக்லேட் ஒன்றை அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

கொரொனா பாதிப்பு நடவடிக்கையாக நாட்டில் முதன்முறையாக ஆந்திர மக்களுக்கு 16 கோடிக்கு மேற்பட்ட முக கவசம் விநியோகம் செய்ய இருப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனாவிலிருந்து மக்களை பாதுகாக்க முக கவசம் உதவும் என்றும் எனவே ஒவ்வொருவருக்கும் தலா மூன்று முக கவசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

 

தற்போது ஆந்திராவில் மக்கள் தொகை 5.3 கோடியாக உள்ளது என்றும் இதற்காக 16 கோடி முகக் கவசங்கள் தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு உடனடியாக முழு கவசங்களை விநியோகம் செய்ய உத்தரவிட்டார்.


Leave a Reply