--- --:--:-- --

SIR-ல் திமுக சதி வேலை செய்தது – உரிய நேரத்தில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்

6

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “உரிய நேரத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் தி.மு.க செய்த சதிவேலைகளை முழுமையாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம். தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஜனநாயகத்திற்கு எதிராக, விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் எஸ்.ஐ.ஆர் – ஐ எதிர்க்கும். முழுமையாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில உரிமைகள் என்றால், டெல்லியில் பதுங்குவது தமிழ்நாட்டில் பாய்வது. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் தி.மு.க-வின் அரசியல் ‘டிராமா’க்கள், காலம் காலமாகத் தமிழகத்தில் இப்படித்தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எஸ்.ஐ.ஆர்.(Special Intensive Revision SIR) முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க, ‘எஸ்.ஐ.ஆர் டிராமா’-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

 

 

எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தநாளில் இருந்து, தி.மு.க-வின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் தி.மு.க-வின் திருட்டு ‘டிராமா’-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். எஸ்.ஐ.ஆர்-ஐ ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய தி.மு.க, மெல்ல மெல்ல தேர்தல் ஆணையத்தோடும் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியோடும் ரகசிய தி.மு.க கூட்டணியை அமைத்துக் கொண்டது. அந்தக் கூட்டணி முழுமை பெற்றதையடுத்து, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுவதும் தி.மு.க-வின் கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றது.

 

 

எஸ்.ஐ.ஆர் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், ஒன்றிய பா.ஜ.க அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது தி.மு.க.தான். இதை யாராலும் மறுக்க முடியுமா? தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?
2025 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணி நடந்த காலம் முழுவதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்தான்.

 

 

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் ‘ஓட்டு ஜாபிதா’வும் தி.மு.க-வின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களிடம்தான் இருந்தன. களத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் (BLO) அனைவரும் மாநில அரசின் ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் போய்ச் சேர்ந்தது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்குத்தான்! எந்த அதிகாரி எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதைக்கூட தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களுமே முடிவு செய்தனர்.

 

 

மாநில உரிமைகள் என்றால், டெல்லியில் பதுங்குவது… தமிழ்நாட்டில் பாய்வது… எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் தி.மு.க-வின் அரசியல் ‘டிராமா’க்கள், காலம் காலமாகத் தமிழகத்தில் இப்படித்தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எஸ்.ஐ.ஆர்.(Special Intensive Revision SIR) முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க, ‘எஸ்.ஐ.ஆர் டிராமா’-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

 

 

எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தநாளில் இருந்து, தி.மு.க-வின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் தி.மு.க-வின் திருட்டு ‘டிராமா’-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். எஸ்.ஐ.ஆர்-ஐ ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய தி.மு.க, மெல்ல மெல்ல தேர்தல் ஆணையத்தோடும் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியோடும் ரகசிய தி.மு.க கூட்டணியை அமைத்துக் கொண்டது.

 

 

அந்தக் கூட்டணி முழுமை பெற்றதையடுத்து, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுவதும் தி.மு.க-வின் கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், ஒன்றிய பா.ஜ.க அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதியிலும்… ஒவ்வொரு தெருவிலும்… ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது தி.மு.க.தான். இதை யாராலும் மறுக்க முடியுமா? தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

 

 

2025 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணி நடந்த காலம் முழுவதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தான். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் ‘ஓட்டு ஜாபிதா’வும் தி.மு.க-வின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களிடம்தான் இருந்தன. களத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள்(BLO) அனைவரும் மாநில அரசின் ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் போய்ச் சேர்ந்தது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்குத்தான்! எந்த அதிகாரி… எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்கூட தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களுமே முடிவு செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon