--- --:--:-- --
10

நவராத்திரி விழா தொடங்கிவிட்ட நிலையில் தொலைத் தூரத்தில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி, சென்னை – போத்தனூர், தாம்பரம் – செங்கோட்டை, ஈரோடு – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06023) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06024) அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

 

 

இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 18-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06033) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 3.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

 

 

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06089) மறுநாள் மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

 

 

21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

இதேபோல், ஈரோட்டில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06145) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06146) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

 

இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06084) மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக்டோபர் 15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon