பிறந்து 14 நாட்களே ஆன கன்றுக்குட்டி பால் சுரக்கும் அதிசயம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே புலவன் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து 14 நாட்களே ஆன கன்றுக்குட்டியின் மடியிலிருந்து பால் சுரக்கிறது. 100 பிரசவங்களில் இதுபோன்று அதிசயம் நிகழும் என கூறிய கால்நடை மருத்துவர்கள் இதனால் கன்றுக் குட்டிக்கும் பசுவிற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறினார். பசுவின் ஹார்மோன்கள் கன்றுக்குட்டியின் ரத்தத்தில் கலந்து காரணமாகவே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

காஞ்சிபுரத்தில் பசியால் வாடும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் பெண் மனநல ஆலோசகரை கண்டு காவலர்கள் வியந்தனர். கொரொனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது .

 

இந்த நிலையில் பல பகுதிகளில் தெருநாய்கள் உணவின்றி பசியால் உள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக உள்ள மோகனா என்பவர் தனது வீட்டில் உணவு சமைத்து தெரு நாய்களுக்கு அளித்து வருகிறார்.

 

வீதி வீதியாக எடுத்துச் சென்று நாய்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்து வருகிறார். தான் குழந்தையாக இருக்கும்போது போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டாலும் நினைவு தெரிந்த நாளிலிருந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply