ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளை முடிவுக்கு வர இருப்பதால் அது நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

 

இது நாளை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர் .

 

இதன் தொடர்ச்சியாக ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை அறிவித்து விட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பிரதமர் மோடி எடுக்க முடிவு ஏற்போம் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற சூழலில் ஊரடங்கு நீட்டிப்பை நீட்டிப்பது தொடர்பான முடிவை பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 6 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 4 ஆயிரத்து 150 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க படுவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரி நிலை குறித்து அறிந்தார் என்றும் எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசின் வழிமுறைகள் இன்று வெளியாகும் என நினைக்கிறோம் என்றும் அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பது முடிவுகளை இன்று அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply