ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை.. தாய் தனது 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உத்திரபிரதேசத்தில் ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை என்று கூறி தாய் தனது ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பதேசி மாவட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசியதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் மனநலம் குன்றியவர் என்பது தெரிய வந்ததாக தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவால் தனது குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்று கூறி அந்த பெண் அந்த பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளனர்.

 

தினசரி கூலி சென்று வந்தபின் ஊதியம் பெற்று வந்த நிலையில் அவை நிறுத்தபட்டதாகவும் பகுதி மக்கள் கூறியுள்ளனர் . அதனிடைய குழந்தைகளை ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர் குணமடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த அவர்கள் கொரொனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 25ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் தீவிர சிகிச்சையின் பலனாக குணமடைந்து வீடு திரும்பினார்.


Leave a Reply