--- --:--:-- --

ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி… கட்டியணைத்து கதறும் வீடியோ

9

துருக்கியில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது தாயை ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கண்ட மகள் கதறி அழுது கட்டியணைத்துக் கொண்டு வீடியோ மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. கொரொனா சிகிச்சையளிக்கும் பாலி கிளினிக் ஒன்றில் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் ஒரு மாத காலமாக கொரொனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தனது 6 வயது மகளை அவரது பாட்டி வீட்டில் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் மிகுந்த இடைவெளிக்குப் பின் தனது மகளுடன் நேரத்தை செலவிட முடிவு செய்த அவர் தன் மகனுக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார்.

 

சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தனது தாயைக் கண்டதும் இனம்புரியாத ஒரு உணர்வில் கண்ணீர் மல்க கட்டியணைத்து அழுதது காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவர்களது பாசப்பிணைப்பை உணர்த்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon