5 நாட்கள் மதுக்கடைகள் இயங்க அனுமதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளனர். அசாம் மாநில அறிவுறுத்தலின்படி அங்கு மதுபான கடைகள் மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபடும் மதுபான கிடங்குகள் ஆகியவை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று மேகலாயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுபான கடைகள் மற்றும் கிடங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரொனா முன்னெச்சரிக்கையாக குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கடைகள் மற்றும் சடங்குகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply