இங்கிலாந்து பிரதமர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் மருத்துவமனையிலேயே சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்து வருகிறார். அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தலைவர்கள் அரசு குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை.

 

அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்னுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னைதானே 10 நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமானதால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

தொடர் சிகிச்சையால் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வேகமாக குணமடைந்து வரும் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலேயே சிறிய அளவிலான உடற்பயிற்சி நடைபயிற்சி செய்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply