இந்தியாவில் வைரஸை வென்று ஒரேநாளில் வீடு திரும்பிய 108 பேர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் ஒரே நாளில் 678 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே நாளில் 108 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறையினர் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

 

ஒரேநாளில் 678 பேருக்கு பாதிப்பு உறுதியாகிவிட்ட நிலையில் 508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை சமூக பரவல் இல்லை மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

 

சமூக மற்றும் மத ரீதியில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார். இந்தியாவில் ஒரு கோடி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகளை தேவை என்ற நிலையில் 3.28 கோடி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகள் உள்ளன என்றார்.


Leave a Reply