திண்டுக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திண்டுக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை வீடுகளின் மேற்கூரைகளில் தூக்கி வீசப்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுகூடிய கனமழை பெய்தது. அப்போது நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொங்கர் குளம் பகுதியில் காற்றின் வேகத்தில் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

 

மேலும் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு வந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டார்.


Leave a Reply