காவல்துறையினருக்கு பூக்களைத் தூவி பாராட்டிய பொதுமக்கள்!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரொனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சாலையில் சென்ற காவல் துறையினரையும் பொதுமக்கள் கைத்தட்டி வரவேற்றதுடன் பூமாரி பொழிந்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை யில் மகாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது என நிலையில் அம்மாநிலத்தில் நாக்பூரில் பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டியதன் தேவையையும் மனித நன்மையையும் உணர்த்தும் வகையில் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கைதட்டி காவல்துறையினரை உற்சாகமாக வரவேற்றதுடன் மாடி வீடுகளில் இருந்து காவல்துறையினர் மீது பூக்களைத் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.






