கொரொனாக்காக போடப்பட்ட முள்வேலி! இரு கிராமத்தாரிடையே முற்றிய சண்டை!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் கொரொனா தடுப்புக்காக போடப்பட்ட முள்வேலி காரணமாக இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அருகருகே லட்சுமிபுரம், கொத்துர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தங்கள் ஊருக்கு புதியவர்கள் யாரும் வராத நிலையில் கொத்தூர், லட்சுமிபுரம் இடையே சாலையில் முதலில் முள்வெளி போட்டனர்.
இதனை தொடர்ந்து கொத்தூர் கிராம பொதுமக்களும் தங்களுக்கு புதியவர்கள் வருவதை தடுக்கும் வகையில் சாலையில் வேலி அமைத்தனர். இதனால் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இரு ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் ஒரே நேரத்தில் சாலையில் திரண்டனர். ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தகவலறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஏற்கனவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொரொனா நோயாளிகளால் காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






