--- --:--:-- --

கொரொனா அச்சம்: உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு சீல்!

5

கொரொனா பரவும் அச்சத்தால் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு அருகில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன்பு மும்பை மாநகராட்சி பாதுகாப்பு குழும அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மும்பை நகரில் 433 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon