கொரோனா எதிரொலி : ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், எம்.பி.,க்களின் சம்பளத்தில் 30% கட்..! தொகுதி நிதியும் 2 ஆண்டுகளுக்கு ரத்து!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், அனைத்து எம்.பி.,க்களின் சம்பளம் ஒரு வருடத்திற்கு 30% சதவீதம் குறைக்கப்படுவதாகவும், எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை நடத்தினார்.

 

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி முதல் அனைத்து எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% ஒரு வருடத்திற்கு குறைப்பது என்றும், ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படுவதும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதும் ரத்து செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மிச்சமாகும் ரூ.7900 கோடி ரூபாய் கொரோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் என பிரகாஷ் ஜவடேஹர் தெரிவித்தார்.

 

இதற்கிடையே எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்ததற்கு பல்வேறு எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மக்களவை எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கு பல்வேறு வழிகள் உள்ள நிலையில், தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை ரத்து செய்தது தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply