காதலானோடு சேர்ந்து சகோதரியை கொலை செய்து தற்கொலை என நாடகம் ஆடிய தங்கை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கலில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த கல்லூரி மாணவியை அவரின் தங்கையே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இருவரையும் நாமக்கல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொசுவம் பட்டியில்  கல்லூரி மாணவி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

 

இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தினார். இறந்த பெண்ணின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்த சூழலில் அவரது கழுத்து எலும்பு உடைந்து இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினரின் சந்தேக பார்வை, உடன் இருந்த அவரது சகோதரி யோகலட்சுமி மீது விழுந்தது.

 

அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது யோகலட்சுமி, ராகுல் என்பவரை காதலித்ததும், சகோதரியின் காதலுக்கு  எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. காதலை கண்டித்து சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த யோகலட்சுமி காதலன் ராகுலை வரவழைத்து தனது சகோதரியின் கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

 

பின்னர் கொலையை தற்கொலையை போல சித்தரித்த மாணவியின் கையை பிளேடால் அறுத்து இருக்கிறார் யோகலட்சுமி. பின்னர் சகோதரி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோரிடம் கூறி நாடகமாடி இருக்கிறார் அந்த பெண். இதையடுத்து ராகுல் மற்றும் யோகலட்சுமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காதலுக்காக உடன் பிறந்த சகோதரியை இளம்பெண் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply