செவிலியராக சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை ஷிக்கா மல்கோத்ரா!
கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் தாமும் இணைந்துள்ளதாக செவிலியர் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பாலிவுட் நடிகை ஷிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஃபேன் காஞ்ச்சிலி லைஃப் இன் அ லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஷிக்கா மல்ஹோத்ரா பிரபலமானார்.
நடிக்க வருவதற்கு முன்பு செவிலியர் பட்டப்படிப்பு முடித்து இருந்த மல்கோத்ரா கொரொனா பரவிவரும் நிலையில் சேவை மனப்பான்மையுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






