இணையத்தில் மதுவாங்க ஆசைப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டம்!
மும்பையில் இணையதளத்தில் மதுபாட்டில் ஆர்டர் செய்து அவரிடம் 51 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மும்பை அருகே கார்கலை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் மது விற்பனை குறித்த விளம்பரத்தை பார்த்து உள்ளார். இதையடுத்து ஆயிரத்து இருநூற்று அறுபது ரூபாய்க்கு இரண்டு மதுபாட்டில்களை ஆர்டர் கொடுத்துள்ளார்.
எப்படியாவது மது பாட்டிலை வாங்கி விட வேண்டும் என்ற அந்த ஆர்வத்தில் டெபிட் கார்டு, பின் எண், செல்பேசியில் வந்த ஓட்டி பிஎண் ஆகியவற்றை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரின் வங்கி கணக்கில் இருந்து 51,000 ரூபாய் எடுக்கப்பட்ட போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார்.






