மருத்துவருக்கே கொரோனா..ஈரோடு மருத்துவமனை மூடல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது தொற்றுக்குள்ளான மருத்துவரிடமிருந்து அவரது பத்து மாத குழந்தை உள்ளிட்ட 3 பேருக்கு பரவியுள்ளது.

 

ஈரோடு ரயில்வே காலனி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 29 வயதான பெண் மருத்துவரிடம் கொரொனா பாதிக்கப்பட்ட நபர் கடந்த 10 நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோவைக்கு பணி மாறுதல் பெற்று இருந்த பெண் மருத்துவர் தனது 23ஆம் தேதி கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனையில் பணியில் சேர்வதாக இருந்தது.

 

ஆனால் அவருக்கு திடீரென காய்ச்சல் இருந்ததால் அவர் பணியில் சேரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர், அவரது தாய், 10 மாத குழந்தை மற்றும் பணி பெண்ணுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நான்கு பேருக்கும் கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பெண் மருத்துவர் பணிபுரிந்த ஈரோடு ரயில்வே காலனி மருத்துவமனை கடந்த 27ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply