ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரொனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவிலும் கொரொனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.


Leave a Reply