கொரொனாவால் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கொரொனா அறிகுறியுடன் ஒரேநாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் கொரொனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோக் நாயக் மருத்துவமனையில் தற்போது வரை 106 பேர் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் தற்போது வரை 153 பேர் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6 பேர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் இரண்டு பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.






