ஸ்கேட்டிங் சூ வாங்க சேமிப்பாக வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய உலக சாம்பியன் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் எண்ணிக்கையும் 50 ஆகியுள்ளது.

 

உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் 7 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும், நோய் தொற்று பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது.

 

இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 170 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் இன்று 27 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்திலும் நேற்று மேலும் பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவருக்கு சிகிச்சை அளித்த இளம் பெண் மருத்துவர், அவருடைய 10 மாத குழந்தை, மருத்துவரின் தாய் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப் Uட்டு உள்ளதாகவும், கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிலதிபர்களும்,பொதுமக்களும் நிவாரண நிதியினை வழங்க பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதனையடுத்து தொழிலதிபர்களும்,பொதுமக்களும் நிவாரண நிதிக்காக தாராளமாக அனுப்பி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவையில் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் – ரித்திகா தம்பதியின் 10 வயது மகன் ஜெய்ஷ்னு.தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.ஸ்கேட்டிங் மேல் தீராத காதல் சிறு வயது முதலே இருந்தது சிறுவனுக்கு.

 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகளுக்காக ஸ்கேட்டிங் விளையாட்டின் மேல் உள்ள விருப்பத்தினால் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.6500 /- ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிவாரண நிதிக்காக வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.அந்த தொகை முழுவதையும் தனது பெற்றோருடன் வந்த ஜெய்ஸ்னு இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமடி அவர்களை சந்தித்து நேரில் வழங்கினான்.

 

இது குறித்து ஜெய்ஸ்னு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் சாலையோரத்தில் வசிப்போர்,ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வருவதாகவும் வேதனைப்பட்ட சிறுவன் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பதற்காகவும்,அதற்கான ஷூவினை வாங்குவதற்காகவும், தனது உறவினர்கள்,அப்பா,அம்மா கொடுத்த பணத்தினை உண்டியலில் வரும் கல்வியாண்டிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.6500 /- ஐ உணவின்றி சாலையோரங்களில் தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்க தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கியதாக தெரிவித்தார்.இச்சிறுவனுக்கு இனுஸ்ரீ என்ற தங்கை உள்ளார் என்பதும்,சிறுவன் கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் வருமான வரித்துறை அதிகாரி ஆவதே தனது லட்சியம் என்றும் தெரிவித்தார்.

 

யார் எப்படி போனால் என்ன ? தான் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் ஒரு சில மனிதர்களிடையே தனது மனிதத்தால் சாலையோரத்தில் உணவின்றி தவிக்கும் மக்களின் பசியை போக்கும் வகையில் தனது சேமிப்பு பணம் ரூ.6500 /- ஐ முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கிய பள்ளி மாணவனின் செயல் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

நாமும் இச்சிறுவனை பின்பற்றுவோமா ?


Leave a Reply