கொரொனா பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ரூ.7.50 கோடி நிதி வழங்கிய ஏஞ்சலினா ஜூலி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் உலகெங்குமுள்ள குழந்தைகளின் பசியை போக்குவதற்காக ஹாலிவுட் பிரபலமான ஏஞ்சலினா ஜூலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 50 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

 

நோ கிட் ஹங்கிரை என்ற அமைப்பிடம் நிவாரண தொகையை வழங்கிய ஏஞ்சலினா ஜூலி பள்ளிகளில் உணவு சாப்பிட்டு வந்த நூறு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கொரொனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் உணவின்றி தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply