கூட்டமாக சுற்றிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 144 தடையை மீறி கூட்டமாக சுற்றிய மக்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். வேடசந்தூரில் சுற்றித்திரிந்த மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ளூர்ப் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் அவ்வழியே காரில் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் வந்தார்.
மக்கள் கூட்டமாக இருப்பதை கண்டதும் காரை விட்டு கீழே இறங்கி மைக்கை பிடித்து பேசி அனைவரையும் அவர் எச்சரித்தார்.
கொரொனாவை தேசிய பேரிடராக கருதியே 144 தடை அமல் படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதை மீறி மக்கள் சுற்றி திரிவதை காண்கையில் அசிங்கமாக உள்ளதாகவும் கூறி அவர் அவர்களை நோக்கி இந்திய பிரஜைகள் தானா சமூக பொறுப்பு உள்ளதா என கேள்வி எழுப்பி எச்சரித்தார்.






