பாடல் பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனா பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூருவில் உதவி காவல் ஆய்வாளர் ஃபாத்திமா என்பவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

புலிகேசி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அவர் அங்குள்ள மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பாடல் ஒன்றை பாடி கொரொனாவிலிருந்து பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தினார். காவல் அதிகாரி பாடிய போது அங்கிருந்தவர்களும் அவருடன் சேர்ந்து பாடினர்.


Leave a Reply