--- --:--:-- --

பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ செலவு நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்வு..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

1

பத்திரிகையாளர்களின் மருத்துவச் செலவுக்கான நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தித் துறை மான்யக் கோரிக்கையின் போது, பத்திரிகையாளர் நலனுக்காக பிக்கிய அறிவிப்புகள் இடம் பெறுவது வழக்கம். வரும் 31-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடை பெற இருந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இன்றுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.

 

இதனால், அடுத்தடுத்த நாட்களில் நடைபெற இருந்த எஞ்சிய அனைத்து துறைகளின் மான்யக் கோரிக்கைகளும் இன்றே நிறைவேற்றப்படுகின்றன. இதனால் 110 விதியின் கீழான பல்வேறு அறிவிப்பை களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

 

இதில், பத்திரிகையாளர்கள் பணி காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ செலவுக்கு ரூ.1.5 லட்சம் என இருந்த நிதி ரூ. 2 லட்சமாக பத்திரிகையாளர் நல நிதியிலிருந்து உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon