கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் விதமாக அதிகாலையிலேயே களத்தில் இறங்கி மாஸ்க் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

 

இதனை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி தலைவர் சதானந்தம் அதிகாலை முதலே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்த பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் ,துண்டு பிரசுரம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தினக்கூலி பணியாளர்களுக்கு இலவச முக கவசம் வழங்கி அனைவரது கைகளிலும் கிருமி நாசினி திரவம் வழங்கி வருகிறார்.

மேலும்,கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சோப்பு போட்டு கைகளை பலமுறை கழுவ வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டதுடன், அதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.அதேபோல அந்த பகுதிக்கு வந்து செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்,இலவச முக கவசங்கள் வழங்கி கைகளை சுத்தமாக வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் கூறுகையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த பணிகளை மேற்கொள்வதாகவும்,இது போன்று ஊரும்,ஊர் மக்களும் சுத்தமாக இருப்பதால் கொரோனாவை விரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பணியின் மாவட்ட கவுன்சிலர் பிரதீப், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பழனிசாமி,ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,உறுப்பினர்கள் கருப்புசாமி,சிவகுமார், வேலுமணி,முத்துலட்சுமி,சுகாதாரத்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி செயலர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply