--- --:--:-- --

அண்ணியுடன் ஏற்பட்ட நெருக்கம்! கொல்லப்பட்ட மனைவி!

4

வெளிநாட்டு வேலை, கைநிறைய சம்பளம் என்றதும் கழுத்தை நீட்டிய இடம் பெண் ஆசை கணவனின் மோசமான கூடா நட்பால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்ற இளம் பெண்ணை கரம் பிடித்தார்.

 

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் சம்பாதித்த பணம் முழுவதையும் அண்ணியிடம் கொடுத்து வந்ததால் முனீஸ்வரன் மனைவி தனலட்சுமி குடும்பம் நடத்தவே கஷ்டப்பட வேண்டிய சூழல் உருவானது. மகளிர் சுய உதவி குழுவின் உதவியுடன் வீட்டில் ஓலைப்பாய் பின்னி விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு தனலட்சுமி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

விடுமுறைக்கு ஊர் திரும்பிய முனீஸ்வரன் அண்ணியிடம் அதிக நெருக்கம் காட்டியதால் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது . எனவே உறவுக்கு தடையாக இருந்த மனைவி தனலட்சுமியை தீர்த்துக்கட்ட முனீஸ்வரன் திட்டம் தீட்டினார். மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்த முனிஸ்வரன் என்னென்னவோ காரணத்தை சொல்லிய போதும் போலீசார் நம்பவில்லை.

 

வழக்கம்போல் போலீசார் நடத்திய விசாரணையில் முனீஸ்வரன் அந்தரங்கம் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து விட்டன. தாய் இறந்தது கூட தெரியாமல் பச்சிளம் குழந்தை பக்கவாட்டில் கைகளை பற்றிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த காட்சி கல்நெஞ்சம் படைத்த உள்ளத்தையும் உருக்குவதாக இருந்தது. தாய் கல்லறைக்கு செல்ல தந்தை சிறைக்கு அனுப்பப்பட யாருடைய ஆதரவும் இன்றி அனாதையாகி விட்டது இந்த பச்சிளம் குழந்தை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon