கொரானா முன்னெச்சரிக்கை… 9-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரானா வைரஸ் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் உட்பட பல மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்ததைப் போன்று தமிழக அரசும் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிக நக்கு விடுமுறை அளித்துள்ளதை போன்று தமிழகத்திலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று 11ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து விடுமுறை விடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். உத்தரபிரதேச அரசு உட்பட பல மாநிலங்கள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கிறன.

சமக் ரசிக்‌ஷா கல்வி சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேச்சியடைய செய்யலாம் என்ற விதி இருப்பதாலும், ஒன்பாம் வகுப்பிற்கும் சிறப்பு அனுமதியுடன் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

 

மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் பிரதான தேர்வுகளான பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பொது தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது. அதே போன்று தமிகத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு விடுமுறை அளித்த நிலையில் தேர்வு முழுமையாக எழுதுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. வைரஸ் தொற்று அபாயமும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா .அருணன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply