கொரோனா உயிர்வாழும் நேரம் பொருளை சார்ந்ததா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


குறுகிய இடைவெளிகளில் இருமல் தும்மலின் போது தெறிக்கும் நீர் திவலைகள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரொனா வைரஸ் பரவுகிறது. இந்த நிலையில் பல்வேறு பரப்புகளில் கொரொனா வைரஸின் உயிர்வாழும் திறன் குறைவு என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

பொருட்களை பேக் செய்து அனுப்பும் போது அதன் பரப்புகளில் கொரொனா வைரஸ் தொற்று இருந்தாலும் சரக்கு போக்குவரத்திற்கு நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அது அழிந்துவிடும். அதேசமயம் இந்த வைரஸ் காற்றிலும் பல்வேறு பரப்புகளிலும் எத்தனை நாட்கள் உயிர் வாழக்கூடியது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று நியூ எங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

காற்றின் நீர் திவலைகளில் கொரொனா மூன்று மணி நேரம் வரை உயிர் வாழக் கூடியது. தாமிரத்தால் ஆன உலக பரப்புகளில் நான்கு மணி நேரம் வரை உயிர் வாழக் கூடியது. அட்டைப் பெட்டிகள் செய்யும் கார்ட்போர்டு 24 மணி நேரமும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லேஸ் ஸ்டீல் உலகப் பரப்பில் 2 முதல் 3 நாட்கள் வரையிலும் வைரஸ் உயிர் வாழும்.

 

இது முழுமையாக ஆய்வக சூழலில் செய்யப்பட்ட பரிசோதனையில் கிடைத்த விவரங்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொருட்கள் அல்லது பார்சல் டெலிவரி செய்யப்படும் போது அவற்றில் கொரொனா வைரஸ் தொற்று இருக்கும் என அஞ்ச தேவையில்லை என்றும் இந்த வழிகளில் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்றும் தோற்று நோய் இயல் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply